Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

நீர்ச்சறுக்கல்
-5 %
அறிந்ததின்மீது அதிருப்தி இருந்தாலும் அறியாததின் மீதுள்ள பயத்தால் அறிந்ததை இறுகப் பற்றிக்கொள்ளும் தன்மை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் உணரக் கிடைக்கிறது. இனம்புரியாத அவஸ்தையின் நீட்சி என்றும் இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முதல் தொகுப்புக்கான சலுகையைக் கோராதவை...
₹57 ₹60
நீர்மாலை
-5 %
ஒரு ஐம்பது சொற்கூட்டங்கள் சேர்ந்து உண்டாக்கக்கூடிய உணர்ச்சியை, சுயம்புலிங்கத்தின் ஒரு சொல் உருவாக்கிவிடுகிறது. முன்னூற்றிச் சொச்சம் சொற்களுக்குள் ஒரு திடகாத்திரமான கதையை அவரால் படைத்துவிடவும் முடிகிறது. தவலைப் பானையின் குடிநீரைப் போல அந்தக் கதையின் ஒரு சொல்கூடத் தழும்பிச் சிதறுவதில்லை. வர்க்கப..
₹119 ₹125
நீல மிடறு
-5 %
இலக்கியத்தில் முதலும் முடிவுமான கச்சாப்பொருளும் அதனை வனைந்து வார்த்தெடுக்கும் களமும் மனித மனம்தான். அதன் ஆழத்துப் புதிர்களும் அவிழ்க்கவொண்ணா முடிச்சுகளும் அடங்கியிருக்கும் இருள்வெளியினின்றும் துளியேனும் தொட்டெடுத்துத் துலக்கிக் காட்டுவதில்தான் படைப்பின் பெறுமதி அடங்கியுள்ளது. இத்தொகுப்பிலுள்ள லாவண்ய..
₹171 ₹180
நீலப் பொருளாதாரம்
-5 %
கடல்சார் வாழ்வை உயிரோட்டமாய்த் தன் படைப்புகளில் தந்திருக்கும் ஜோ டி குருஸ் கடலோரப் பொருளாதாரம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். துறைமுகங்களின் உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, மீன்வளப் பாதுகாப்பு ஆகியவை குறித்த முக்கியமான சிந்தனைகளையும் யோசனைகளையும் முன்வைக்கிறார் ஜோ டி குருஸ். கர..
₹276 ₹290
நீலி
-5 % Out Of Stock
தனக்கேயான கவிதை மொழியைக் கண்டடைந்து எழுதிவரும் மாலதி மைத்ரியின் மூன்றாவது கவிதைத் தொகுதி இது. ஒரு பார்வையாளரின் வெளிப்பாடுகளாக அல்லாமல் பங்கேற் பாளரின் அனுபவங்களாகவே இவரது கவிதைகள் அமைந் துள்ளன. அகமன வோட்டங்களை மட்டுமல்லாமல் சமூகப் பார்வையையும் கவிதையாக்குவதில் திறன் கொண்டவர். குறுகிய காலத்துக் ..
₹71 ₹75
நீளா
-4 %
குறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது. பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும்..
₹67 ₹70
நீள் தினம்
-5 %
அன்றாட கவனிப்பில் பிடிபடும் எளிய கணநேர நிகழ்வுகளைச் சொல்பவை பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள். நிகழ்வுகளைச் சொல்லும்போதும் சொல்லைக் கடந்த மனநிலையை வாசகனிடம் உருவாக்க முயற்சி செய்கிறார். ‘இன்றைக்கும், எப்போதும் பெரும் காதலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாளைக்கும் இடையில் வந்து விழும்’ கவிதை நிகழ்வுகள..
₹57 ₹60
நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப் பூச்சிகள்
-5 %
சைதன்யாவின் கவிதை மழைத்துளி பொம்மை மகளின் மஞ்சள் மான்குட்டியும் வண்ணத்துப்பூச்சியைக் கண்டால் என்னிடம் ஒப்படையுங்கள் என்ற யதார்த்த மொழி கண்விழித்துக்கொள்கிறது யாரும் அறியாத பறவை ரகசிய இரவுக்குள் சப்தத்தில் வெளிச்சத்தை நிரப்புகிறது இவருடைய கவிதை அறங்களில் தொலையாத இவருடைய உலகம் முதுகில் மரங்கொத்தி..
₹57 ₹60
நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்
-5 %
அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நடைக்குப் பேர்போனவை. ‘காலச்சுவடு’, ‘காலம்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த அவரது பத்திகள் அடங்கிய தொகுப்பு இது. சுஜாதா, அசோகமித்திரன் முதலியோரின் படைப்புகள், ஆளுமைச் சித்திரங்களில் தொடங்கி, ஜப்பான் அரசு நடைமுற..
₹190 ₹200
நெகிழிக் கோள்
-5 %
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்சினை. பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும்தான் இம்மாசுபாட்டைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய முதல் படி. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, சுற்றுச்சூழலில் இதன் தாக்கம், இம்மாசுபாட்டால் உண்டாகும் சமூக, பொருளாதார, சுகாதார விளைவுகள், தீர்வுகள் ஆகியவற..
₹138 ₹145
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
-5 %
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள் - படைப்புகள் படைப்பாளிகள் போக்குகள் சமகாலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சலனங்களைக் கூர்மையான பார்வையோடு அணுகும் கட்டுரைகள் இவை. நூல்கள், படைப்பாளிகள், இலக்கியப் போக்குகள் ஆகியவற்றினூடே பயணிக்கும் அரவிந்தனின் அணுகுமுறை படைப்பின் ஆதார சுருதியையும் படைப்பாளுமைகளின்..
₹214 ₹225
நெஞ்சில் ஒளிரும் சுடர்
-5 %
சுந்தர ராமசாமியுடன் வாழ்ந்த ஐம்பதாண்டுக் காலத்தின் அனுபவங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் கமலா ராமசாமி. ஓர் இலக்கிய ஆளுமையின் வாழ்க்கைத் துணைவி என்ற நிலையைக் கடந்து கமலா ராமசாமி துல்லியமான அவதானிப்பாளராகவும் இந்தக் குறிப்புகளில் தெரியவருகிறார். பிறந்த ஊரான கடம்போடுவாழ்வில் கழித்த இளம் பருவத்தை நினைவ..
₹166 ₹175
Showing 865 to 876 of 1299 (109 Pages)